உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெளிப்படையான நிர்வாகம் குழு அமைத்து செயல்படுவோம்

வெளிப்படையான நிர்வாகம் குழு அமைத்து செயல்படுவோம்

கோவை :'கோவை மாநகராட்சியில் வெளிப்படையான நிர்வாகம் மேற்கொள்ளப்படும்; பொது அமைப்புகளுடன் சேர்ந்து குழு அமைக்கப்பட்டு திட்டங்கள் தீட்டப்படும்' என, ம.தி.மு.க., பொதுசெயலாளர் வைகோ பேசினார்.சட்டசபை தேர்தலை புறக்கணித்த ம.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலில் தனித்து களமிறங்கியுள்ளது. கோவை மாநகராட்சி தேர்தல் பிரசாரமும் தீவிரமடைந்து இருக்கிறது. ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, மாநகராட்சி பகுதிகளில் சூறாவளி பிரசாரத்தை மேற்கொண்டார். சுந்தராபுரம், உக்கடம் கோட்டைமேடு, இடையர்வீதி, சுப்ரமணியம்பாளையம், மணியகாரன்பாளையம், கணபதி, புதுசித்தாபுதூர், பீளமேடு, சிங்காநல்லூர், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். மேயர் வேட்பாளர் அர்ஜுனராஜ் மற்றும் வார்டு கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.பிரசார கூட்டங்களில் வைகோ பேசுகையில், ''ம.தி.மு.க., மேயர் பதவிக்கு வந்தால், ஊழலற்ற நேர்மையான நிர்வாகம் நடக்கும். ரோட்டரி கிளப் போன்ற பொது அமைப்புகளை சேர்த்து ஒரு குழு அமைக்கப்பட்டு, அதன் ஆலோசனைப்படி வளர்ச்சி பணிகள் செய்யப்படும்'' என்றார்.மாநகர் மாவட்ட செயலாளர் மோகன்குமார், புறநகர் மாவட்ட செயலாளர் மாரியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை