உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு பொருட்காட்சி நிறைவு ரூ.37 லட்சம் வருவாய்

அரசு பொருட்காட்சி நிறைவு ரூ.37 லட்சம் வருவாய்

கோவை : கோவையில் கடந்த 60 நாட்களாக நடந்து வந்த அரசு பொருட்காட்சி நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. டிக்கெட் விற்பனை மூலம் 37 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. கோவையில் வழக்கமாக கோடை விடுமுறையில் அரசு பொருட்காட்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சற்று முன்னதாக, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன் பொருட்காட்சி நடந்தது. இந்த பொருட் காட்சி வழக்கமான பொருட்காட்சியைப் போலவே நடந்தாலும், முந்தைய அரசின் நலத்திட்டங்கள் மக்களை சென்றடையச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப் பட்டது. இதன் பின் ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறையில் நடத்தப்படுவது போல், கடந்த மே 11ல் இரண்டாவது முறையாக பொருட்காட்சி துவங்கியது. ஜூனில் பள்ளிகள் துவங்கி விட்டதால், சாதாரண நாட்களை விட சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாட்களில் மட்டுமே அதிக கூட்டம் காணப்பட்டது. 60 நாட்கள் நடந்த பொருட்காட்சி, நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. இக்கண்காட்சியை 31 ஆயிரத்து 640 பெரியவர்கள், 2,330 குழந்தைகள் என மொத்தம் 33 ஆயிரத்து 970 பேர் பார்வையிட்டுள்ளனர். டிக்கெட் விற்பனை வாயிலாக 37 லட்சத்து74 ஆயிரத்து 660 ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இதைத் தவிர, பொருட்காட்சியில் கடைகள் அமைத்தவர்கள் வாயிலாக கிடைத்துள்ள வருமானம் தனி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ