உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டருக்கு கோரிக்கை

ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டருக்கு கோரிக்கை

ஆனைமலை : ஆத்துப்பொள்ளாச்சி ஊராட்சி பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆத்துப்பொள்ளாச்சி பொதுமக்கள் சார்பில் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பப்பட்டுள்ள மனு: காளியப்பகவுண்டன்புதூர் பிரிவில் இருந்து சாத்துப்பாறை வரையில் உள்ள மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு உள்ளது. இந்த மூன்று கிலோமீட்டர் தூரத்திற்கு இடைப்பட்ட பகுதியில் கடைகள், வீடுகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவது மட்டுமில்லாமல் அடிக்கடி விபத்துக்களும் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி