உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திருக்குறள் பேச்சுப்போட்டி

திருக்குறள் பேச்சுப்போட்டி

கோவை : 'ஸ்ரீ ராம் சிட்ஸ்' நிறுவனத்தின், 'ஸ்ரீராம் இலக்கிய கழகம்' சார்பில் தமிழக அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சுப்போட்டி நடக்க உள்ளது. கோவையில் வரும் 23ல் சபர்பன் மேல்நிலைப்பள்ளியில் போட்டி நடக்கிறது. இடைநிலை பிரிவில் 6,7,8 ம் வகுப்பு; உயர்நிலை பிரிவில் 9,10ம் வகுப்பு; மேல்நிலைப் பிரிவில் 11,12ம் வகுப்பு; கல்லூரி பிரிவில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு, பொறியியல், மருத்துவம், பாலிடெக்னிக் மாணவர்கள் பங்கேற்கலாம்.ஒரு பள்ளியில், ஒவ்வொரு வகுப்பிலும் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இடைநிலைப்பிரிவில் மொத்தம் ஆறு பேரும், உயர்நிலை பிரிவில் நான்கு பேரும், மேல்நிலைப் பிரிவில் நான்கு பேரும், கல்லூரி இள நிலை பிரிவில் நான்கு பேரும், முதுநிலை பிரிவில் இருவரும் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசும், சான்றிதழும் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி