உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி

ஆனைமலை : ஆனைமலை அடுத்த கோட்டூர் ம.செ. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி நடந்தது.தேசிய பசுமைப்படை தொடர்பாக சுற்றுச்சூழல் பேரணி கோட்டூரில் உள்ள முக்கிய வீதிகளில் சென்றது. பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் லோகநாயகி, உதவி தலைமை ஆசிரியர் திருமலைசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.பேரணியின் போது மரம் வளர்த்தல், மழைநீர் சேகரிப்பு, சுற்றுப்புற தூய்மை, பிளாஸ்டிக் தீமைகள் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் உடல் கல்வி ஆசிரியர்கள், பேரணி பொறுப்பாசிரியர்கள் மாசிலாமணி, ஆனந்தியும் @பரணியை வழி நடத்திச்சென்றனர். பேரணி சென்ற மாணவர்களை அனைத்து ஆசிரியர்களும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை