கட்டட பொறியாளர்கள் சங்க ஆலோசனை கூட்டம்
கோவை:கோவை மண்டல கட்டட பொறியாளர்கள் சங்கத்தின், ஆலோசனை கூட்டம் நடந்தது. தலைவர் ராஜதுரை தலைமை தாங்கினார்.கோவை கொடிசியா அரங்கத்தில், வரும், 28, 29ம் தேதிகளில், 'கான்பெஸ்ட்' என்ற பெயரில் நடைபெறவுள்ள கட்டுமானத்துறை கண்காட்சிக்கு, சிறப்பான ஏற்பாடு செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.இதில், செயலாளர் நாகேந்திர குமார், பொருளாளர் சீனிவாசன், முன்னாள் தலைவர் ஜெயவேல், ஆலோசகர்கள் பிரபாகரன், வெற்றிச்செல்வன் கண்காட்சி செயலாளர் செந்தில்நாதன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, ஏவிபி ரெடிமிக்ஸ் நிறுவன மேலாளர் குமார் செய்திருந்தார்.