உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 100 சதவீத ஓட்டுப்பதிவு இலக்கு பிளக்ஸ் பேனர்

100 சதவீத ஓட்டுப்பதிவு இலக்கு பிளக்ஸ் பேனர்

கோவை;இந்திய தேர்தல் கமிஷன் ஒவ்வொரு வாக்காளரும் தவறாது ஓட்டளிக்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது. மேலும், 100 சதவீத ஓட்டுப்பதிவை இலக்காக கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.'என் ஓட்டு என் உரிமை', 'வாக்களிப்பது நமது கடமை' என்பன உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய நோட்டீஸ்கள் வழங்கப்படுவதுடன், பொது இடங்களில் விழிப்புணர்வு பிளக்ஸ் பேனர்களும் வைக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி பகுதிகளில் வண்ண கோலங்கள் வாயிலாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.மாவட்டம் முழுவதும் பொது மக்கள்அதிகம் கூடும், 300க்கும் அதிகமான இடங்களில் இந்த பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட உள்ளதாக தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி