உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மதுரை வீரன் கோவிலில் 11ம் ஆண்டு விழா

மதுரை வீரன் கோவிலில் 11ம் ஆண்டு விழா

கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம் முனியப்பசுவாமி, பட்டத்தரசியம்மன், மதுரைவீரன் கோவிலில், 11ம் ஆண்டு விழா, கடந்த 7ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கியது.கடந்த, 9ம் தேதி, முனியப்பன் மற்றும் மதுரைவீரன் சுவாமிகள் விசர்ஜனத்துக்கு மண் எடுத்தல் நிகழ்ச்சி நடந்தது. வரும், 20ம் தேதி, காலை 4:00 மணிக்கு, விநாயகர் பூஜை நடக்கிறது. மதியம் மரம் எடுத்து வருதல், மாலை சண்டா மரம் நடுதல், இரவு முனியப்ப சுவாமி உருவம் எடுத்து வருதல், இரவு 12:00 மணிக்கு, முனியப்ப சுவாமி வழிபாடு நடக்கிறது.வரும், 21ம் தேதி, இரவு சக்தி கரகம் எடுத்து வருதல், 22ம் தேதி, காலை பட்டத்தரசி அம்மன் உருவம் எடுத்து செல்லுதல், அம்மனுக்கு கிடா வெட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் மாவிளக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு, சக்தி கரகம் கங்கையில் விடும் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 23ம் தேதி, மதியம் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், இரவு மஹா அபிஷேக பூஜையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை