உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 1.5 லட்சம் மர நாற்றுகள் ரெடி இலவசமாக வினியோகம்

1.5 லட்சம் மர நாற்றுகள் ரெடி இலவசமாக வினியோகம்

மேட்டுப்பாளையம்;பசுமை தமிழ்நாடு இயக்கம் திட்டத்தில், ஒரு லட்சத்து 50 ஆயிரம் மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள், பொதுமக்கள் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என, வனத்துறை தெரிவித்துள்ளது.காரமடை வனச்சரகர் ரஞ்சித் கூறியதாவது:-கோவை மாவட்டம் காரமடை, மேட்டுப்பாளையம் மற்றும் அன்னுார் பகுதிகளில் வனத்துறையின் நாற்றுப்பண்ணைகள் உள்ளன. இப்பண்ணைகளில், 'பசுமை தமிழ்நாடு இயக்கம்' திட்டத்தில், தேக்கு, மலைவேம்பு, சவுக்கு, மகாகனி, புங்கன், பாதாம், வேம்பு உள்ளிட்ட வகையிலான, ஒரு லட்சத்து 50 ஆயிரம் மர நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.விவசாயிகள், பள்ளிகள், கல்லுாரிகள், தொழிற்சாலைகள் மற்றும் தரிசு நிலதாரர்களுக்கு இலவசமாக நாற்றுகள் வழங்கப்படும். வாங்க விரும்புவோர், 9843611370, 9626469997 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு, ஆதார் நகல், புகைப்படம் மற்றும் சிட்டா ஆகிய ஆவணங்கள் சமர்ப்பித்து நாற்றுகள் பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.--


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி