உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரும்பு வியாபாரி வீட்டில் 15 சவரன் நகை திருட்டு 

இரும்பு வியாபாரி வீட்டில் 15 சவரன் நகை திருட்டு 

கோவை: துடியலுார் பகுதியில் இரும்பு வியாபாரி வீட்டின் பூட்டை உடைத்து, 15 சவரன் நகை திருடிச்சென்றவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். துடியலுார், நரசிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த நாகராஜ், 45; மனைவி, நிர்மலா, 43 தம்பதி இரும்பு கடை வைத்து நடத்தி வருகின்றனர். கடந்த 3ம் தேதி, நாகராஜ் வெளியூர் சென்று விட்டார். இதனால் நிர்மலா கடையை கவனிக்க சென்றார். பின்னர் வீடு திரும்பி போது, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளது. பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள் மாயமாகியிருந்தன. நிர்மலா, துடியலுார் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை