லாரியில் எரிசாராயம் கடத்தல் 1,650 லிட்டர் பறிமுதல்
பாலக்காடு;தமிழகத்தில் இருந்து லாரியில் கடத்தி வந்த, 1,650 லிட்டர் எரிசாராயத்தை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு குருவிக்கூட்டு மரம் அருகே, சி.ஐ., கிருஷ்ணகுமாரின் தலைமையிலான கலால் துறையின் அமலாக்கப்பிரிவினர் , நேற்று முன்தினம் இரவு வாகனச்சோதனை நடத்தினர்.அப்போது, பொள்ளாச்சி பகுதியில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த லாரியை தடுத்து நிறுத்தி நடத்திய சோதனையில், 46 கேன்களில், 1,650 லிட்டர் எரிசாராயம் மறைத்து வைத்து கடத்திச் செல்வது தெரியவந்தது.இதையடுத்து லாரியில் இருந்த மூவரை கைது செய்து நடத்திய விசாரணையில், லாரி டிரைவர் செம்மணாம்பதி வடக்கே காலனி பகுதியைச் சேர்ந்த விக்ரம், 20, மதன் குமார் 22, ரவி 42, ஆகியோர் என்பது தெரியவந்தது.இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக, கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.