உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரூ.23 லட்சம் சுருட்டிய மோசடி கும்பலுக்கு வலை

ரூ.23 லட்சம் சுருட்டிய மோசடி கும்பலுக்கு வலை

கோவை: கோவை சிங்காநல்லுார் கிருஷ்ணா காலனியை சேர்ந்தவர் கோகுலகிருஷ்ணன், 37. அவரை போனில் தொடர்பு கொண்ட ரதிமீனா என்பவர், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனத் தெரிவித்தார். இதை நம்பிய கோகுலகிருஷ்ணன், 23 லட்சம் ரூபாயை முதலீடு செய்தார். இதையடுத்து அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது புகாரின்படி, கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர். இதேபோல், கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்த சுபாஷ்கரன், 37 என்பவருக்கு 'வாட்ஸாப்'பில் பகுதி நேர வேலை தகவல் வந்தது. அதில், பணம் முதலீடு செய்தால், வருவாய் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து சுபாஷ்கரன், பல்வேறு கட்டங்களாக, 5.96 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். ஆனால், எவ்வித லாபமும் கிடைக்கவில்லை. அவரது புகாரின்படி, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ