உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்றரை மாதத்திற்கு பிறகு 30 நிமிடம் மழை

மூன்றரை மாதத்திற்கு பிறகு 30 நிமிடம் மழை

அன்னுார்:அன்னுாரில் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு, நேற்று மழை பெய்ததால் மண் குளிர்ந்தது. மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அன்னுார் வட்டாரத்தில், கடந்த சில வாரங்களாக, அனல் பறக்கும் வெயில் அடித்தது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விட்டது. குளம், குட்டைகளில் நீர் குறைந்து விட்டது.கடந்த ஜனவரியில் அன்னுார் பகுதியில் மழை பெய்தது. மூன்றரை மாதத்திற்கு பிறகு நேற்று மாலை 3:30 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. லேசாகத் துவங்கி பின்னர் 20 நிமிடம் பலமாகவும், பிறகு லேசாகவும் மொத்தம் 30 நிமிடங்கள் மழை பெய்தது. கடும் வெப்பத்தால் தவித்து வந்த மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை