உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 30 சவரன் தங்க நகை மாயம்

30 சவரன் தங்க நகை மாயம்

கோவை : நகர கூட்டுறவு வங்கி லாக்கரில் இருந்து எடுக்கப்பட்ட, 30 சவரன் நகை காணாமல் போனது குறித்து ராமநாதபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.ராமநாதபுரம், ரகிமான் சேட்டு காலனியை சேர்ந்தவர் தனபாக்கியம்,68. இவர் கடந்த மாதம், 15ம் தேதி காலை, 11:45 மணியளவில் ராமநாதபுரத்தில் உள்ள நகர கூட்டுறவு வங்கிக்கு தனது மகனுடன் சென்று லாக்கரில் இருந்த நகையை எடுத்துவந்தார். வரும் வழியில் சிவப்பு நிற பை காணாமல் போனது தெரிந்து அதிர்ச்சியடைந்தார்.இதில், 30 சவரன் தங்க நகை இருந்த நிலையில் மீண்டும் வங்கிக்கு சென்று தேடிப்பார்த்தும் பை கிடைக்கவில்லை. ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதியப்பட்டு 'சிசிடிவி' காட்சி பதிவுகள் உதவியுடன் நகையை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி