உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாறையில் மோதிய வாகனம் சுற்றுலா வந்த 31 பேர் காயம்

பாறையில் மோதிய வாகனம் சுற்றுலா வந்த 31 பேர் காயம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, வால்பாறை கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வாகனம் விபத்துக்குள்ளானது. அதில், 31 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த கார்த்திக்கேயன்,55, என்பவரது ஏற்பாட்டில், 13 குழந்தைகள், 18 பெரியவர்கள் என, மொத்தம், 31 பேர், கடந்த, 24ம் தேதி ஐந்து நாள் பயணமாக கேரளாவுக்கு சுற்றுலா சென்றனர்.கேரளா மாநிலத்தில் இருந்து, வால்பாறை வந்து அங்கு சுற்றிப்பார்த்த பின், பொள்ளாச்சி நோக்கி வாகனத்தில் வந்து கொண்டு இருந்தனர்.வாகனத்தை, டிரைவர் தினேஷ்,25, ஓட்டி வந்தார். பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டில் கவியருவி அருகே இரண்டாவது கொண்டை ஊசி வளைவு பகுதியில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.விபத்தில் சிக்கியவர்களை அவ்வழியாக சென்றோர், வனத்துறையினர் மீட்டு, ஆம்புலன்ஸ் வழியாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வாகனத்தில் வந்த, 31 பேரும் லேசான காயத்துடன், அதிர்ஷ்டவசமாக தப்பினர். இதுகுறித்து, காடம்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி