உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணியில் 52 மி.மீ., மழை 9.84 அடியாக நீர்மட்டம் உயர்வு

சிறுவாணியில் 52 மி.மீ., மழை 9.84 அடியாக நீர்மட்டம் உயர்வு

கோவை : சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 52 மி.மீ., மழை பதிவாகியுள்ளது; நீர் மட்டம், 9.84 அடியாக உயர்ந்திருக்கிறது.கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவாகியிருக்கிறது. இம்மாத துவக்கத்தில் வெப்ப அலை வீசியதால், கடுமையாக பாதிக்கப்பட்ட மக்கள், தற்போது உருவாகியுள்ள காலநிலை மாற்றத்தால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கோவை மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, பதிவான மழை அளவு:பீளமேடு விமான நிலையம் - 22 மி.மீ., வேளாண் பல்கலை - 11, பெரிய நாயக்கன்பாளையம் - 6.20, பில்லுார் அணை - 9, கோவை தெற்கு தாலுகா - 12, சூலுார் - 40, வாரப்பட்டி - 15, தொண்டாமுத்துார் - 35, மதுக்கரை தாலுகா - 3, போத்தனுார் - 4 மி.மீ.,பொள்ளாச்சி - 19.60, மாக்கினாம்பட்டி - 51, கிணத்துக்கடவு - 5, ஆனைமலை - 26, ஆழியார் - 33, சின்கோனா - 6, சின்னக்கல்லார் - 9, வால்பாறை பி.ஏ.பி., - 34, வால்பாறை தாலுகா - 32, சோலையாறு - 8 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 52 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது. அடிவாரத்தில், 34 மி.மீ., மழை பெய்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, 3.13 கோடி லிட்டர் தண்ணீர் நேற்று எடுக்கப்பட்டது; 9.84 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருந்தது. ஒரு வாரத்துக்கு மிதமானது முதல் கன மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்படும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ