உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 52 வேளாண் விஞ்ஞானிகளுக்குபல்கலையில் சிறப்பு பயிற்சி

52 வேளாண் விஞ்ஞானிகளுக்குபல்கலையில் சிறப்பு பயிற்சி

கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் மற்றும் ஐதராபாத் தேசிய வேளாண் விரிவாக்க மேலாண்மை நிறுவனம் இணைந்து, ஏழு மாநிலங்களை சேர்ந்த 52 வேளாண் விஞ்ஞானிகளுக்கு, இயற்கை வேளாண்மை பயிற்சி வழங்கப்படுகிறது.வேளாண் பல்கலைக் கழகத்தில், கடந்த 20ம் தேதி, துணைவேந்தர் கீதாலட்சுமி துவக்கி வைத்து, இயற்கை வேளாண்மை முக்கியத்துவம், மாறிவரும் காலநிலை மாற்றத்துக்கு ஏற்ப ஓர் உத்தியாக இயற்கை விவசாயம் விளங்குவது குறித்து விளக்கினார்.விரிவாக்க கல்வி இயக்குனர் முருகன், நம்மாழ்வார் இயற்கை ஆராய்ச்சி மைய தலைவர் மற்றும் பேராசிரியர் கிருஷ்ணன் ஆகியோர் பேசினர். பயிற்சியில், இயற்கை விவசாய கூறுகள், பயிர் சாகுபடி முறைகள், பூச்சிநோய் மேலாண்மை, இயற்கை விவசாய இடுபொருட்கள் தயாரிப்பு, செயல் விளக்கங்கள், வயல்வெளி பார்வையிடல் ஆகியவை அளிக்கப்பட்டு வருகின்றன.இன்று நிறைவு பெறும் பயிற்சியில், பங்கேற்றுள்ள விஞ்ஞானிகள், முதன்மை பயிற்சியாளர்களாக, அந்தந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கு, இயற்கை விவசாயம் குறித்து பயிற்சி வழங்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !