உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகனங்களில் அதிக பாரம் ரூ.7.53 லட்சம் அபராதம்

வாகனங்களில் அதிக பாரம் ரூ.7.53 லட்சம் அபராதம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி கோட்டத்தில், கிணத்துக்கடவு, வடக்கிபாளையம், ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகளவு கனிமவளங்கள், கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.இங்கு இருந்து அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சொக்கனுார், நடுப்புணி, வடக்கிபாளையம் உள்ளிட்ட பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு தணிக்கை மேற்கொண்டனர். அதில், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி வந்த, லாரிகளை பறிமுதல் செய்தனர்.வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில்,'வாகனங்களில் அதிக எடை ஏற்றியதாக மொத்தம், 10 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. தகுதிச்சான்று இல்லாதது, வரி கட்டாதது உள்ளிட்ட, 12 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 107 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மொத்தம், 7 லட்சத்து, 53 ஆயிரத்து, 500 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டது.இதுபோன்று செயலில் தொடர்ந்து ஈடுபட்டால், வாகனங்களின் டிரைவர் லைசென்ஸ் தற்காலிகமாக ரத்து மற்றும் வாகனத்தின் அனுமதி சீட்டு ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை