உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிலம்பம் சுற்றியபடி 15 கி.மீ., ஓடி சாதனை புரிந்த சிறுவன்

சிலம்பம் சுற்றியபடி 15 கி.மீ., ஓடி சாதனை புரிந்த சிறுவன்

கோவை;சிலம்பம் சுற்றியபடி 15கிமீ., தொடர்ந்து ஓடி, ஒன்பது வயது சிறுவன் சாதனை புரிந்துள்ளார்.குரும்பபாளையத்தை சேர்ந்த தமிழ் செல்வன் - பிரியா தம்பதியின் மகன் மித்ரன்,7. இவர் பாரம்பரிய கலைகள் மேல் ஆர்வம் அதிகம் இருந்ததால், சிறு வயது முதலே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில், சிலம்பத்தில் சாதனை படைக்கவேண்டும் என்ற நோக்கில், ஆதித்யா குளோபல் பள்ளி வளாகத்தில் சாதனை முயற்சியை, சிறுவனின் பயிற்சியாளர் மற்றும் பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.அதன்படி, ஒரு மணி நேரம், 36 நிமிடங்களில் 15கிமீ., ஓடியபடியே ஒற்றை சிலம்பத்தை 11, 520 முறை சுற்றி சாதனை புரிந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ