உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 25 ஆண்டாக புறக்கணிக்கப்பட்ட நாடக கலைஞர்களுக்கு வாய்ப்பு

25 ஆண்டாக புறக்கணிக்கப்பட்ட நாடக கலைஞர்களுக்கு வாய்ப்பு

பொள்ளாச்சி;ஊட்டியில் நடந்த மலர் கண்காட்சியின் கலை நிகழ்ச்சியில், 25 ஆண்டுகளாக புறக்கப்பட்டு வந்த கோவை மாவட்ட நாடக நடிப்பு கலைஞர்களின் நிகழ்ச்சி அரங்கேறியது.கோவை மாவட்ட நாடகக் கலைக் கழக நிறுவனர் சண்முகவடிவேல் அறிக்கை வருமாறு:நீலகிரி மாவட்டம், ஊட்டியில், தோட்டக்கலைத் துறை சார்பில் ஆண்டுதோறும், மலர்க் கண்காட்சி நடத்தப்படுகிறது. அதில், மாநில அளவில் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெறும்.ஆனால், கடந்த, 25 ஆண்டுகளாக, கோவை மாவட்ட நடிப்பு மற்றும் இசை கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்காமல் புறக்கணிக்கப்பட்டு வந்தது. நடப்பு ஆண்டு மலர்க்கண்காட்சிக்கும் இந்த நிலை நீடித்தது.இதையடுத்து, தமிழக முதல்வரின் தனிப்பிரிவு வாயிலாக முறையீட்டு புகார் மனு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி, முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்ற மனு, நீலகிரி மாவட் கலெக்டர் அருணாவுக்குச் சென்றடைந்தது.இதையடுத்து, கலைநிகழ்ச்சியில், கோவை மாவட்ட நாடக நடிப்பு மற்றும் இசை கலைஞர்களுக்கும் வாய்ப்பு அளிக்க, நீலகிரி மாவட்ட தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் சிபிலாமேரிக்கு, கலெக்டர் அருணா உத்தரவிட்டார்.அதன்பேரில், கடந்த, 18ம் தேதி, கோவை மாவட்ட நாடக நடிப்பு மற்றும் இசை கலைஞர்களின் நிகழ்ச்சி நடந்தது. புகார் மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு, கோவை மாவட்ட நாடக நடிப்பு மற்றும் இசை கலைஞர்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ