வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சூப்பர் எரிக்கன்க்
மேலும் செய்திகள்
புது ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கும் பணி துவக்கம்
26-Aug-2024
கோவை : ''புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பம் செய்பவர்கள், சரியான சான்றுகளுடன், உண்மையான தகவல்களுடன் விண்ணப்பம் செய்தால் மட்டுமே, புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும்,'' என, மாவட்ட வழங்கல் அலுவலர் ஜீவரேகா தெரிவித்தார்.அவர் கூறியதாவது:புதிய ரேஷன் கார்டுகளுக்கான விண்ணப்பம், ஆன்லைன் வழியாக மட்டுமே ஏற்கப்படுகிறது. விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள் சரியாக இல்லாமல், பிழையான தகவல்கள் இருந்தால், விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படுகிறது.ஒரே வீட்டில், கூட்டு குடும்பமாக வசிப்பவர்களுக்கு, புதிய கார்டுகள் வழங்கப்படுவதில்லை. தனி வீட்டில் தனி முகவரியில் வசிப்பவர்கள், பழைய குடும்ப கார்டில் உள்ள பெயர்களை நீக்கி, உரிய சான்றுகளுடன் புதிய கார்டு வேண்டி, விண்ணப்பிக்க வேண்டும். வேறு மாநிலங்களை சேர்ந்த பலர், புதிய கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர். நேரில் சென்று விசாரணை செய்தால், அங்கு அவர்கள் வசிப்பதற்கான எந்த சான்றும் இருப்பதில்லை. சிலர் அந்த முகவரியில் வசிக்காமல், வேறு இடத்தில் வசிக்கின்றனர். நேரடி விசாணையில் தவறுகள் உள்ள விண்ணப்பங்களை நிறுத்தி வைத்து, போதிய சான்றுகளுடன் மீண்டும் விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம். சரியான விண்ணப்பங்களை, தமிழ்நாடு இ-கவர்னன்ஸ் துறைக்கு அனுப்பி வைக்கிறோம். அங்கு ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் சரி பார்க்கப்பட்ட பிறகு, தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு கார்டு வழங்கப்படுகிறது.சரியான சான்றுகளுடன், உண்மையான தகவல்களுடன் விண்ணப்பம் செய்தால் மட்டுமே, புதிய ரேஷன் கார்டு கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.
l கோவை மாவட்டத்தில் முழுநேரம் மற்றும் பகுதி நேர ரேஷன் கடைகள் என, மொத்தம் 1542 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. l இந்த கடைகள் வாயிலாக, 11.41 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில் மற்றும் பொருட்கள் மாதம் தோறும் வழங்கப்பட்டு வருகின்றன.l கோவை மாவட்டத்தில், 2021ம் ஆண்டு முதல், 90 ஆயிரம் மின்னணு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன.l கடந்த ஆண்டு ஜூன் முதல் புதிய ரேஷன் கார்டு வேண்டி, 15 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். இதில் தகுதியுள்ள விண்ணப்பங்கள் என, பரிசீலனை செய்யப்பட்டு, 5357 பேருக்கு புதிய கார்டுகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. l தகுதியற்ற, 5444 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒப்புதல் வழங்கப்பட்ட புதிய மின்னணு ரேஷன் கார்டுகளில், 1635 பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. மீதமுள்ள கார்டுகள் அச்சிடும் பணி நடக்கிறது.
சூப்பர் எரிக்கன்க்
26-Aug-2024