புகையிலை பொருள் விற்ற ஒருவர் கைது
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு, கோதவாடியை சேர்ந்தவர் தங்கஇசக்கிமுத்து, 32, மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, தங்கஇசக்கிமுத்து கடையில் போலீசார் சோதனை செய்தனர். இதில், புகையிலை பொருள் விற்பனை செய்தது உறுதியானது. கடையில் இருந்து 30 புகையிலை பொருள் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, அவரையும் கைது செய்தனர்.