உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேங்காய் அளவை கண்டறிந்து பிரித்து வைக்கும் ரோபோ

தேங்காய் அளவை கண்டறிந்து பிரித்து வைக்கும் ரோபோ

'அக்ரி இன்டெக்ஸ்' கண்காட்சியில், தேங்காய்களை அதன் அளவுக்கு ஏற்ப பிரித்து வைக்கும் ரோபோ இடம் பெற்றிருந்தது.தென்னங்காய் மற்றும் தேங்காய்கள் பிரித்தெடுக்கும் பணி, மனிதர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதை ரோபோ வாயிலாக எளிமையாக அதன் அளவுக்கு ஏற்ப பிரித்து, குறிப்பிட்ட பெட்டிகளில் வைக்கும் அளவுக்கு ரோபோ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.கண்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த 'ப்ளோ டெக்' அரங்கில், 'அட்னா ஆட்டோ மெஷின்' தயாரிப்பில், இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் நிறுவனத்தினர் கூறுகையில், 'வழக்கமாக, தேங்காய் பிரித்தெடுக்கும் பணி, மனிதர்களால் மேற்கொள்ளப்படும். அதை விடுத்து, ரோபோ பயன்படுத்தலாம் என்று தோன்றியதன் விளைவாக, இது கண்டுபிடிக்கப்பட்டது.இந்த ரோபோ, சிறியது முதல் பெரியது வரை, தேங்காய், தென்னங்காய்களை அதன் அளவுக்கு ஏற்ப பிரித்தெடுத்து, அதற்கேற்ப வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் வைத்து விடும். தவிர, பழங்கள், காய்கறிகளை எடுத்து வைக்கவும் பயன்படுத்தலாம். காய்கறிகளில், உதாரணமாக, தக்காளியில் பழங்களை ஒரு பக்கமாகவும், சற்று காயாக இருக்கும் பட்சத்தில், அதையும் தனியாக எடுத்து வைக்கும் அளவுக்கு தயார்படுத்தியுள்ளோம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இதை பயன்படுத்தலாம்,'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ