உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தட்டை பயிறு விதை பண்ணையில் ஆய்வு

தட்டை பயிறு விதை பண்ணையில் ஆய்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு வட்டாரம், வெள்ளாளபாளையத்தில் தட்டை பயிறு விதைப்பண்ணையை, கோவை விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.அவர் கூறியதாவது: தட்டை பயிறு விதை வரிசை விதைப்பு செய்வதன் வாயிலாக, சரியான பயிர்கள் எண்ணிக்கையை பராமரிக்க முடியும். சரியான பயிர்களின் எண்ணிக்கை வயலில் இருந்தால் மட்டுமே அதிகபட்ச மகசூலை பெற முடியும்.பூக்கும் தருணத்தில் டி.ஏ.பி., கரைசல் இரண்டு சதவீதம், 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிப்பது அவசியம். மேலும், பூ உதிர்வதை குறைக்கும் என்.ஏ.ஏ., 40 பிபிஎம் (ஒரு லிட்டரில், 40 மில்லி கிராம்) தெளிக்க வேண்டும். 'வம்பன் 3' என்ற தட்டை பயறு ரகம் ஏக்கருக்கு, 400 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.தட்டை பயறு பூக்கும் பருவம் மற்றும் காய் முதிர்ச்சி பருவத்தில் விதைச்சான்றளிப்பு அலுவலர் ஆய்வு மேற்கொள்வார். பிற ரக கலவன், பிற பயிறு வகைகள் மற்றும் நோய் தாக்குதல் அறிகுறிகள் இருப்பது ஆய்வு செய்யப்படும்.விதைப்பண்ணை அறுவடை செய்த பின், விதை குவியல்களின் சரியான ஈரப்பதம் மற்றும் கல், மண், பூச்சி நோய் தாக்கிய விதையை அகற்றி தரமான விதையை விவசாயிகள் உற்பத்தி செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.ஆய்வின் போது, பொள்ளாச்சி விதைச்சான்றளிப்பு அலுவலர் நந்தினி, விதை உதவி அலுவலர் ராமச்சந்திரன் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ