உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை தேரோட்டம்

சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடி கிருத்திகை தேரோட்டம்

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிவில், ஆடி கிருத்திகையொட்டி, இன்று மாலை, தேரோட்ட நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிவில், ஆடி கிருத்திகை அபிஷேக விழா, ஆண்டுதோறும் விமர்சியாகக் கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு விழா, இன்று நடக்கிறது.இதையொட்டி, காலை, 8:30 மணிக்கு, மகாலிங்கபுரம் விஸ்வகர்ம காமாட்சியம்மன் கோவிலில் இருந்து, சுவாமி அபிேஷகத்துக்கான பால் குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், விரதம் இருந்த பக்தர்கள், பால்குடம் எடுத்துச்சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளனர்.இதேபோல, 9:30 மணிக்கு, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள், தீபாராதனை நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு தேரோட்ட நிகழ்ச்சியும் நடக்கவுள்ளதால், பக்தர்கள் கலந்து கொண்டு, முருகப்பெருமானை தரிசனம் செய்யலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !