| ADDED : ஆக 19, 2024 01:33 AM
வால்பாறை;வால்பாறை தாலுகா மலைப்பகுதி என்பதால், இரண்டு மாடிக்கு மேல் கட்டடம் கட்டக்கூடாது என கோர்ட் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், வால்பாறையில் விதிமுறையை மீறி, 7 மாடி வரை கட்டடம் கட்டியுள்ளனர். இது தவிர குடியிருப்புக்களையும், தங்கும் விடுதிகளாக மாற்றியுள்ளனர்.இந்நிலையில், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் உத்தரவின் பேரில், வால்பாறை தாசில்தார் சிவக்குமார் தலைமையில், வால்பாறையில் கட்டட உரிமையாளர்களுக்கு, கட்டட உரிமை சான்று வழங்கும் வகையில் வருவாய்த்துறை அதிகாரிகள் விண்ணப்பம் வழங்கினர்.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தங்கும் விடுதி உள்ளிட்ட மக்கள் தங்கும் கட்டடங்களுக்கு, கட்டட உரிமை சான்றிதழ் பெற வேண்டும். இது வரை பெறாதவர்களுக்கு விண்ணப்பம் வழங்கப்பட்டுள்ளது. மூன்று வாரத்திற்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, தாசில்தார் அலுவலகத்தில் வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.