உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை கோவிலில் நடிகர் யோகி பாபு தரிசனம்

மருதமலை கோவிலில் நடிகர் யோகி பாபு தரிசனம்

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நடிகர் யோகி பாபு சுவாமி தரிசனம் செய்தார். 'இந்தியாவின் எடிசன்' என அழைக்கப்படும், ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கை வரலாறு படத்தை, கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்குகிறார். இந்த படத்தில், நடிகர் மாதவன் கதாநாயகனாகவும், நடிகர் யோகிபாபு துணை நடிகராகவும் நடிக்கிறார்.படப்பிடிப்புக் காட்சிகள், கோவையில் நடக்கிறது. இதற்காக, நேற்று முன்தினம், நடிகர் யோகி பாபு கோவை வந்திருந்தார். நேற்று அவர் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தார். அப்போது, தான் புதிதாக நடிக்க உள்ள இரண்டு திரைப்படங்களின் ஆவணங்களை, மூலவர் சன்னதியில் வைத்து வழிபட்டார். மூலவர் சன்னதி, பட்டீஸ்வரர் சன்னதி, மரகதாம்பிகை சன்னதியில் சுவாமி தரிசனம் செய்து புறப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ