விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
பொள்ளாச்சி;பொள்ளாச்சியில் நடக்கும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும், 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.பொள்ளாச்சி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும், சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதில், அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் பங்கேற்பதால், விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறும் வகையில் கூட்டம் நடக்கும்.இதன்படி, ஆக., மாதத்துக்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.நிர்வாக காரணங்களினால் இக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு, வரும், 6ம் தேதி காலை, 11:00 மணிக்கு சப் - கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.