உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருத்துவமனையில் வாலிபரை அடித்துக்கொன்ற விவகாரம் நிர்வாக ஊழியர்கள் கைது

மருத்துவமனையில் வாலிபரை அடித்துக்கொன்ற விவகாரம் நிர்வாக ஊழியர்கள் கைது

கோவை:கோவை, பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் ராஜன், 38; மனைவி, இரு குழந்தைகள் உள்ளனர். இரு தினங்களுக்கு முன், பீளமேட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வேலைக்கு சென்றார். அங்கு சில பொருட்கள் மாயமான விவகாரம் தொடர்பாக, அவரை பிடித்த ஊழியர்கள், நிர்வாகத்தினரிடம் ஒப்படைத்தனர். நிர்வாக ஊழியர்கள், ராஜனை கடுமையாக தாக்கியதில், படுகாயமடைந்த ராஜன் மயங்கினார். அதே மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டும் உயிரிழந்தார். இந்த விவகாரம், கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மருத்துவமனை துணைத்தலைவர் நாராயணன், மக்கள் தொடர்பு அலுவலர் சசிகுமார், தகவல் தொழில்நுட்ப மேலாளர் ரமேஷ், செயலாக்க பிரிவு அலுவலர் சரவணகுமார், பிளம்பர் சுரேஷ், மற்றொரு சரவணகுமார், செக்யூரிட்டி மணிகண்டன், கிடங்கு மேலாளர் சதீஸ்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மருத்துவமனை கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போது, ராஜனுடன் மேலும் ஒருவர் அழைத்து செல்லப்படுவது தெரிந்தது. அவர் மாயமாகியுள்ளார். அவர் யார், எதற்காக அழைத்துச் செல்லப்பட்டார், தற்போது அவரது நிலை என்ன என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ