உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விளையாட்டு பிரிவில் 20 மாணவர்கள் சேர்க்கை

விளையாட்டு பிரிவில் 20 மாணவர்கள் சேர்க்கை

உடுமலை: உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், நேற்று விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடந்தது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியானது. இதையடுத்து, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் துவங்கின.இந்நிலையில், உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் முதல் நடக்கிறது.நேற்று விளையாட்டுத்துறையில், மாவட்டம் முதல் சர்வதேசம் வரை சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கான சேர்க்கை கலந்தாய்வு நடந்தது. இதில் சம்பந்தப்பட்ட மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்றனர்.இதில் வணிகவியல் பிரிவில், 5 மாணவர்கள், அறிவியல் பிரிவில் 7 பேர், கலைப்பிரிவில் 3 மாணவர்கள், இலக்கியப் பிரிவில் 3 பேர் என மொத்தமாக 20 மாணவர்கள் சேர்க்கை பதிவு செய்துள்ளனர்.தொடர்ந்து பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, ஜூன் 10ம் தேதி துவங்குகிறது. கூடுதல் விபரங்களுக்கு கல்லுாரி இணையதளத்தை பார்வையிடலாம்.இந்த தகவலை, கல்லுாரி முதல்வர் கல்யாணி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை