உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் அட்மிஷன்

அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் அட்மிஷன்

கோவை;கோவை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், 2024-25ம் கல்வியாண்டுக்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு பகுதியில் சேரவும், பகுதி நேர பட்டய படிப்பில் சேரவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், முதலாமாண்டு பட்டயப்படிப்பில் சேரவும், பகுதி நேர பட்டயப்படிப்பில் சேர பத்தாம் வகுப்புடன் இரண்டாண்டு ஐ.டி.ஐ., அல்லது பத்தாம் வகுப்பு இரண்டாண்டு பணி அனுபவம் இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், சிவில், மெக்கானிக்கல், இ.சி.இ., ஐ.சி.இ., கம்ப்யூட்டர் இன்ஜி., கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கார்மென்ட் டெக்னாலஜி, வணிகவியல் உள்ளிட்ட படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இப்படிப்புகளுக்கு, வரும் 24ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பதிவு கட்டணம், 150 ரூபாய் செலுத்த வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் பதிவு கட்டணம் செலுத்தவேண்டிய அவசியமில்லை. இக்கல்லுாரியில் ஆண்டுக்கட்டணம், 2,452 ரூபாய் மட்டுமே. வயது வரம்பு இல்லை என்பதால் மாணவர்கள், மகளிர் இவ்வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, 98947-84127/ 98942-78110 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ