உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சரக்குவாகனத்தில் சாகச பயணம்; கண்டு கொள்ளாத அதிகாரிகள்

சரக்குவாகனத்தில் சாகச பயணம்; கண்டு கொள்ளாத அதிகாரிகள்

வால்பாறை : வால்பாறையில், 30க்கும் மேற்பட்ட தேயிலை எஸ்டேட்களில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், வால்பாறை நகரில் இருந்து பல்வேறு எஸ்டேட்களில் தேயிலை பறிக்கும் பணிக்காக தொழிலாளர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.சில எஸ்டேட்களில் மட்டும் தொழிலாளர்களை பாதுகாப்பான முறையில் வாகனத்தில் அழைத்து செல்கின்றனர். பெரும்பாலான எஸ்டேட்களுக்கு, அந்தந்த எஸ்டேட் லாரி வாயிலாக தொழிலாளர்களை பல கி.மீ., துாரம் மலைப்பாதையில் அழைத்துச்செல்கின்றனர்.வனவிலங்குகள் நடமாட்டம் மிகுந்த எஸ்டேட் பகுதியில், லாரிகளில் தொழிலாளர்களை அழைத்துச்செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.எஸ்டேட் ரோடுகள், கரடு, முரடாக இருப்பதால், லாரியின் பின் பக்கம் தொழிலாளர்கள் நின்று கொண்டு பயணிப்பது பாதுகாப்பு இல்லாதது.இதே போல், சிறிய எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளர்களை, ஞாயிற்றுக்கிழமை நாளில் வால்பாறை நகருக்கு அத்தியாவசியப்பொருட்களை வாங்க சரக்கு வாகனங்களில் அழைத்து வருகின்றனர்.வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் போலீசார் வாகனங்களை சோதனை செய்து, பாதுகாப்பின்றி தொழிலாளர்களை அழைத்துச்செல்லும் எஸ்டேட் நிர்வாகத்துக்கு அறிவுரை வழங்க வேண்டும்.தொழிலாளர்களை பாதுகாப்பான முறையில், தனியார் பஸ்கள் வாயிலாக அழைத்துச்செல்ல வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை