உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஒன்றரை மாதத்துக்கு பின் நடந்த மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்

ஒன்றரை மாதத்துக்கு பின் நடந்த மாநகராட்சி குறைதீர்ப்பு கூட்டம்

கோவை;கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில், குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஜூன் 18ம் தேதி மேயர் கல்பனா தலைமையில், கடைசியாக குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. மேயர் கல்பனா ராஜினாமா செய்ததால், குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படவில்லை. புதிய மேயராக ரங்கநாயகி பொறுப்பேற்றார்.இதையடுத்து, நேற்று மேயர் ரங்கநாயகி தலைமையில், குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது. 54 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு, மேயர் ரங்கநாயகி, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, மத்திய மண்டலம் வார்டு எண் 48க்குட்பட்ட காந்திபுரம் பி.கே.ஆர்., நகர் பகுதியை சேர்ந்த குணசேகரன் அளித்த குடிநீர் வரி, முகவரி மாற்றம் குறித்த புகாருக்கு, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், மாநகராட்சி நகர் நல அலுவலர்(பொறுப்பு) பூபதி, உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி