மேலும் செய்திகள்
சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
22-Aug-2024
வால்பாறை;வால்பாறையில், ரோட்டை சீரமைப்பது தொடர்பான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.வால்பாறை அடுத்துள்ளது முடீஸ் நல்லமுடி எஸ்டேட். இங்கிருந்து அரை கி.மீ., தொலைவில் ைஹபாரஸ்ட் எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டில் நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.இந்நிலையில், நல்லமுடியிலிருந்து ைஹபாரஸ் வரையிலான அரை கி.மீ., துாரம் உள்ள ரோடு, கடந்த, 15 ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் எஸ்டேட் பகுதிக்கு அரசு பஸ் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ரோட்டை சீரமைக்காவிட்டால், இன்று (26ம் தேதி) போராட்டம் நடத்துவோம் என, மக்கள் அறிவித்திருந்தனர்.இது தொடர்பான, தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிவக்குமார் தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது. எஸ்டேட் அதிகாரிகள், போக்குவரத்துக்கழக அதிகாரிகள், ைஹபாரஸ்ட் எஸ்டேட் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.பேச்சு வார்த்தையின் முடிவில், எஸ்டேட் நிர்வாகத்தின் சார்பில் முதல் கட்டமாக 'பேட்ச் ஒர்க்' செய்யவும், அதன்பின் ரோடு சீரமைக்கவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனால், போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாக தொழிற்சங்க தலைவர் அருணகிரிபாண்டி தெரிவித்தார்.
22-Aug-2024