உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி... கண்கொள்ளா காட்சி! நவீன தொழில்நுட்ப கருவிகளுக்கான பதிவே சாட்சி

அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சி... கண்கொள்ளா காட்சி! நவீன தொழில்நுட்ப கருவிகளுக்கான பதிவே சாட்சி

கோவை;கோவை கொடிசியாவில் நடந்து வரும் வேளாண் கண்காட்சியில், விடுமுறை நாளான நேற்று, திரளான விவசாயிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். இறுதி நாளான இன்றும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.கோவை கொடிசியா சார்பில், 'அக்ரி இன்டெக்ஸ்' என்ற 22வது வேளாண் கண்காட்சி, தொழிற்காட்சி வளாகத்தில், கடந்த 11ம் தேதி துவங்கியது. வழக்கமாக நான்கு நாட்கள் நடத்தப்படும் கண்காட்சி, அதிக வரவேற்பின் காரணமாக, இம்முறை, நாளை வரை என, ஐந்து நாட்களுக்கு நடத்தப்படுகிறது. விடுமுறை நாளான நேற்று, காலை முதலே, விவசாயிகள், பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. பலர், குடும்ப சகிதமாக வந்திருந்தனர். கோவையை சே்ந்தவர்கள் மட்டுமின்றி, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பேர் வந்ததால், 'பார்க்கிங்' ஏரியா நிரம்பியது.

விதைகளின் கூடாரம்

கண்காட்சியில், கீரைகளுக்கு பல அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரிய கீரை விதைகள், பூ வகைகள், மர வகை விதைகள் மற்றும் நாற்றுகள், கொடி வகை விதைகளை வாங்குவதில் பலர் ஆர்வம் செலுத்தினர். கிழங்குகளில் இத்தனை வகைகளா என வியக்க வைக்கும் அளவுக்கு, ஆட்டு கொம்பு, காவள்ளி, அதலைக்காய், பெருவள்ளி, ஆகாச கருடன், முடவாட்டுக்கால் ஆகிய பெயர்களில் கிழங்கு வகைகள் வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை