உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் பல்கலை இளமறிவியல் சேர்க்கை நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு

வேளாண் பல்கலை இளமறிவியல் சேர்க்கை நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு அறிவிப்பு

கோவை;தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், பொதுக்கல்வி பிரிவில் ஏற்பட்ட காலியிடங்களுக்கான நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு 31ம் தேதி (நாளை) நடக்கிறது.நடப்பாண்டில், வேளாண் பல்கலை, மீன்வள பல்கலை மற்றும் அண்ணாமலைப் பல்கலை (வேளாண்மைப் பிரிவு) ஆகியவற்றுக்கு ஒரே விண்ணப்பம் வழியாக மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான இடஒதுக்கீட்டிற்கும் மற்றும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கும் இணையதளவழி கலந்தாய்வு ஜூன் 23 முதல் 26 ம் தேதி வரை நடைபெற்றது.வேளாண் பல்கலையில், பொதுக்கல்வி பிரிவில் ஏற்பட்ட காலியிடங்களுக்கு நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, நாளை நடக்கிறது. இதில், 868 இடங்கள் காலியாக காட்டப்பட்டுள்ளது. தற்காலிக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் உரிய சான்றிதழ்களுடன், வேளாண் பல்கலை அண்ணா அரங்கில் நடக்கும் நான்காம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவேண்டும்.இத்தகவல், மாணவர்களின் மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், https://tnagfi.ucanapply.comஎன்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு 9488635077, 9486425076 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ