உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உழவன் செயலி பயன்படுத்த வேளாண் துறை அறிவுரை

உழவன் செயலி பயன்படுத்த வேளாண் துறை அறிவுரை

பெ.நா.பாளையம்:விதைகள், உரங்கள், வானிலை உள்ளிட்டவைகளை தெரிந்துகொள்ள, விவசாயிகள் உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும் என, வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது.தமிழக அரசின் வேளாண் உழவர் நலத்துறை பல்வேறு வேளாண் விரிவாக்க சேவைகளை வழங்கி வருகிறது. தற்போது, அனைத்து விவசாயிகளிடமும், ஸ்மார்ட் போன் வசதி உள்ளதால், வேளாண்மை தொடர்பான பல்வேறு தகவல்கள், அவை வழியாக அனுப்பப்பட்டு வருகிறது.இது தொடர்பாக, 'உழவன் செயலி' உருவாக்கப்பட்டு, அதில் பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், வானிலை முன்னறிவிப்பு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு விவசாய மானிய திட்டங்கள், விளைச்சல் அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் ஆகியவை குறித்து, மாவட்ட வாரியாக பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. எனவே, விவசாயிகள், உழவன் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளுமாறு வேளாண்துறை, விவசாயிகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை