மானிய விலையில் விதைகள் வேளாண் துறை அழைப்பு
உடுமலை: உடுமலை வட்டாரம், குறிச்சிக்கோட்டை வேளாண் விரிவாக்க மையத்தில், விவசாயிகளுக்கு தேவையான உளுந்து, சோளம் விதைகள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.வேளாண் துறை சார்பில், நடப்பு பட்டத்தில் விதைக்கக்கூடிய, சான்று பெற்ற விதைகளான, உளுந்து வம்பன்-8, சோளம் கோ-32 ஆகிய விதைகள் மானிய விலைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு தேவையான விதைகள், குறிச்சிக்கோட்டை வேளாண்மை துணை விரிவாக்க மையத்தில் இருப்பு உள்ளது.அதே போல், பயிர்களுக்கு தேவையான நுண்ணுாட்ட சத்து உரங்களும் தேவையான அளவு இருப்பு உள்ளதாகவும், 97512 93606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.விவசாயிகள் மானிய விலையில் இந்த விதைகளை வாங்கி பயன்பெறலாம்.