உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அஜிதாவுக்கு கல்லுாரியில் கிடைத்தது சீட்

அஜிதாவுக்கு கல்லுாரியில் கிடைத்தது சீட்

கோவை;பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்று, கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த திருநங்கை மாணவிக்கு, 'தினமலர்' செய்தியால் கொங்குநாடு கல்லூரியில் சீட் கிடைத்துள்ளது.கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்தவர் அஜிதா, 18. திருநங்கையான இவர், வடகோவை மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தேர்வில், 600க்கு 373 மதிப்பெண்கள் பெற்று அஜிதா தேர்ச்சி பெற்ற நிலையில், கல்லூரிகளில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதாக புகார் வந்தது. இதையடுத்து, மே 8ல் வெளியான நமது நாளிதழில், 'உயர்கல்வி கதவு திறக்குமா? திருநங்கை மாணவி எதிர்பார்ப்பு' என்ற தலைப்பில் செய்தி வெளியானது.செய்தியை பார்த்த கொங்கு நாடு கலை, அறிவியல் கல்லூரி நிர்வாகத்தினர், மாணவி அஜிதா விரும்பிய பி.எஸ்.சி. உளவியல் படிப்பு படிக்க, சீட் அளித்துள்ளனர்.மாணவி அஜிதா கூறுகையில், ''நான் விரும்பிய சைக்காலஜி துறையில், சீட் கிடைத்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கொங்குநாடு கலை, அறிவியல் கல்லூரிச் செயலாளர் வாசுகி, மூன்று ஆண்டு கல்வியையும் இலவசமாகப் படிக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளார். அவரையும், இந்த வாய்ப்பை வழங்க உறுதுணையாக இருந்த போலீஸ் துணை கமிஷனர் சுஹாசினியையும் மறக்க முடியாது. கல்வி வாய்ப்பு தேடும், என்னைப் போன்ற சமுதாயத்தினருக்கு,அனைத்துக் கல்லூரிகளும் வாய்ப்பு அளிக்க வேண்டும்,''என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ