உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வியக்க வைக்கும் விநாயகர் சிலைகள்  

வியக்க வைக்கும் விநாயகர் சிலைகள்  

கோவை;கோவை பூம்புகார் கைவினைப்பொருட்கள் விற்பனை அங்காடியில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் சிலைகள் விற்பனை, கண்காட்சி நடக்கிறது. இங்கு வீட்டில் வைத்து பூஜை செய்யக்கூடிய விநாயகர் சிலைகள் வெவ்வேறு அளவுகளில், பல வண்ணங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், பஞ்சலோகம், பித்தளை. சந்தனமரம், கருப்பு மற்றும் வெள்ளை உலோக சிலைகள், தஞ்சை ஓவியங்கள், காகிதக்கூழ், களிமண் பொம்மைகள், துணியில் வரைந்த ஓவியங்கள் மற்றும் எண்ணற்ற விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.அனைத்து விநாயகர் சிலைகளுக்கும், 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சி காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை, வரும் 12ம் தேதி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ