உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்

காட்டு யானை தாக்கி மூதாட்டி படுகாயம்

தொண்டாமுத்தூர் : செம்மேட்டில், ஒற்றைக்காட்டு யானை தாக்கியதில் மூதாட்டி படுகாயமடைந்தார்.செம்மேடு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரி. இவர் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் தனியாக தூங்கி கொண்டு இருந்தார். அப்போது, நள்ளிரவு, 11:30 மணியளவில், அப்பகுதிக்குள் ஒற்றைக் காட்டு யானை புகுந்துள்ளது. ஒற்றைக் காட்டு யானை, ஈஸ்வரியின் வீட்டின் முன் கதவை உடைத்து, வீட்டின் உள்ளே இருந்த அரிசி மூட்டையை வெளியில் நின்றவாறு எடுத்து உட்கொண்டுள்ளது. ஈஸ்வரி வீட்டிற்குள்ளேயே பதுங்கியதால் தப்பினார். ஈஸ்வரியின் வீட்டு இரும்பு கதவை, காட்டு யானை உடைக்கும் சத்தத்தை கேட்டு, பக்கத்து வீட்டிலிருந்த ருக்மணி,70 என்ற மூதாட்டி, திருடன் வந்து விட்டான் என நினைத்து வீட்டிற்கு வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது யானை, மூதாட்டியை தனது தும்பிக்கையால் தள்ளிவிட்டு அங்கிருந்து சென்றது. இதில், மூதாட்டி ருக்மணி அருகில் இருந்த சாக்கடை கால்வாயில் விழுந்து, பலத்த காயம் அடைந்தார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை