கோவை : கோவையில் காரீப் பருவத்தில், பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்த அரசாணை பெற்று ,தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது.கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை: கோவை மாவட்டத்திலுள்ள விவசாயிகள், காரீப் பருவத்தில் பயிர்காப்பீடு செய்ய சொந்த நிலம், குத்தகை நிலம் உள்ளவர்கள் சிட்டா, அடங்கல், வங்கி கணக்கு புத்தகம், ஆதார் அட்டை ஆகியவற்றைக்கொண்டு, இ--சேவை மையம் வாயிலாக பயிர்காப்பீடு செய்யலாம். இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும், பயிர் மகசூல் இழப்பீட்டிலிருந்து விவசாயிகள் தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். இது குறித்த சந்தேகங்களுக்கு, அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகலாம். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.
எந்த பயிருக்கு எவ்வளவு கட்டணம்?
பயிர்காப்பீடு ஏக்கர் ஒன்றுக்கு நெற்பயிருக்கு, 764 ரூபாயும், உளுந்து மற்றும் பச்சை பயருக்கு, 308 ரூபாய். கடைசி தேதி வரும் 31.l மக்கா சோளத்துக்கு 744 ரூபாய், சோளத்துக்கு, 245 ரூபாய், கொள்ளுக்கு, 308 ரூபாய். கடைசி தேதி செப்., 16.l கத்தரிக்காய்க்கு 1,170 ரூபாய், வெங்காயத்துக்கு, 1,782 ரூபாய், தக்காளிக்கு 1,495 ரூபாய். கடைசி தேதி, ஆக.,31.l வாழை பயிருக்கு ஏக்கருக்கு 2,939 ரூபாய், மரவள்ளிக்கு 1,720 ரூபாய், மஞ்சளுக்கு 722 ரூபாய். கடைசி தேதி செப்.,16.