உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பா.ம.க., துணை தலைவர் நியமனம்

பா.ம.க., துணை தலைவர் நியமனம்

கோவை;கோவை மாவட்ட பா.ம.க., தலைவர் மற்றும் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தவர் தங்கவேல் பாண்டியன். 2016 சட்டசபை தேர்தலில், கவுண்டம்பாளையம் தொகுதி பா.ம.க., வேட்பாளராக போட்டியிட்டார். மாநில செயற்குழு உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் இவர், அக்கட்சியின் மாநில துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அக்கட்சி நிறுவனர் ராமதாஸ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி