உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாரதியார் பல்கலையில் தொலைதூர பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

பாரதியார் பல்கலையில் தொலைதூர பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை;பாரதியார் பல்கலையில், திறந்த மற்றும் தொலைதூர கற்றல்வழி பட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.பாரதியார் பல்கலை தொலைமுறை கல்விக் கூடம், முதுநிலை சார்ந்து 15 பட்டப் படிப்புகuw திறந்த, தொலைதூரக் கற்றல் வழியில் வழங்குகிறது. முதுகலைத் தமிழ் இலக்கியம், முதுகலை ஆங்கில இலக்கியம், முதுகலை வணிகவியல், முதுகலை வணிக மேலாண்மை, முதுநிலை இதழியல், தகவல் தொடர்பியல், முதுகலை வரலாறு, முதுநிலை சமூகப் பணி, முதுநிலை கணினிப் பயன்பாடு, முதுநிலை தகவல் தொழில்நுட்பம், முதுநிலை இயற்பியல், முதுநிலை கணினி அறிவியல், முதுநிலை கணிதம், முதுநிலை பயன்பாட்டு உளவியல் ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன.2024--25ம் கல்வியாண்டு அமர்வில், இதற்கான மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது. திறந்த, தொலைதூரக் கற்றல்வழி பட்டப் படிப்புகளில் சேர, மாணவர்கள் இணைய வழியிலேயே விண்ணப்பிக்கலாம். விவரங்களுக்கு, https://sde.b-u.ac.in/ என்ற பாரதியார் பல்கலை தொலைமுறைக் கல்விக்கூட இணையதளத்தை காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை