உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கோவை, : கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் செயல்படுகிறது. இதுதவிர, மகளிருக்கென தொழிற்பயிற்சி நிலையம், பழங்குடியினருக்கான தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. 2024ம் கல்வியாண்டுக்கு கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விணணப்பங்கள் பதிவு செய்யப்படுகின்றன.எலக்ட்ரீசியன், பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், ஒயர்மேன், வெல்டர், இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், ஆண், பெண் இரு பாலருக்கும் ஆறு மாதம், ஓராண்டு, ஈராண்டு பயிற்சி அளிக்கப்படும். தொழிற்பிரிவுகளுக்கு சேர்க்கை துவங்க உள்ளது. பயிற்சியில் சேர விரும்புவோர், www.skilltraining.tn.gov.inஎன்ற இணைய தள முகவரியில், ஜூன் 7ம் தேதி இரவு, 12:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை