மேலும் செய்திகள்
கைப்பந்து போட்டியில் - பி.எஸ்.என்.ஏ., வெற்றி
03-Feb-2025
கோவை; எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லுாரியில், மேலாண்மை ஆய்வுகள் துறை சார்பில், 'அர்த்தசாஸ்திரா' என்ற திட்ட கண்காட்சி நடந்தது.பிரஸ்ஸானா குழுமங்களின் இணை நிர்வாக இயக்குனர் அனிஷ் பிரஸ்ஸேனா, விசாகப்பட்டினத்தை சேர்ந்த நடன இயக்குனர் பெரா கவுதம் குமார் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். விப்ரோ, ஷ்னைடர் எலக்ட்ரிக், கே.எஸ்.பிரைவேட் லிமிடெட், ஏபிடி லிமிடெட், சைபர் ஆரன் மற்றும் ஸ்டார்ட்-அப் டிஎன் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்புரையாற்றினர்.தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் அல்லாதது என, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தொழில் முனைவு, தலைமைத்துவம் மற்றும் தொழில்துறை வலையமைப்பை வளர்க்கும், 64 புதுமையான திட்டங்கள் இடம்பெற்றன. 70க்கும் மேற்பட்ட நிறுவனங்களைச் சேர்ந்த ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.எஸ்.என்.எஸ்., பொறியியல் கல்லுாரி இதுபோன்ற, கல்வி மற்றும் தொழில்துறையை இணைப்பதன் மூலம், எதிர்கால வணிகத் தலைவர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் வளர்ப்பதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்தியதாக, கல்லுாரி முதல்வர் செந்துார பாண்டியன் தெரிவித்தார்.
03-Feb-2025