அருள் கார்டன் அருகில் நிரம்பி வழிகிறது சாக்கடை துர்நாற்றம் குடலை புரட்டினாலும் யாருக்குமில்லை அக்கறை
சாலை ஆக்கிரமிப்பு
சாய்பாபா காலனி, பி.எஸ்.என்.எல்., ரோட்டில், சில வீடுகள் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.- மதிவதினி, சாய்பாபாகாலனி. இப்படி பார்க் பண்ணா எப்படி?
கணபதி, சி.எம்.எஸ்., பள்ளி எதிரில், கே.ஆர்.ஜி., நகர், முதல் வீதியில், டூவீலர் ஒர்க் ஷாப் நடத்தி வருபவர், பழைய டூவீலர்களை சாலையோரம் நிறுத்தியுள்ளார். பல வருடங்களாக நிறுத்தப்பட்டுள்ள இந்த டூவீலர்களால், அருகிலுள்ள கோவிலுக்கு வரும் பக்தர்கள், வாகனங்களை நிறுத்த சிரமப்படுகின்றனர்.- பொதுமக்கள், கே.ஆர்.ஜி., நகர். புதிய மின்கம்பத்திற்கு காத்திருப்பு
மாநகராட்சி, 84வது வார்டு, ஆல்வின்நகர், ரெயின்போ காலனியில் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி, அங்கேயே போட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகியும், புதிய கம்பம் அமைக்கப்படவில்லை. தெருவிளக்கின்றி, இரவில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.- ராஜசேகர், ஆல்வின் நகர். வாகனஓட்டிகளுக்கு இடையூறு
வடவள்ளி, வேம்பு அவென்யூ, சிறுவாணி ரோட்டில், பல கார் ஒர்க் ஷாப்கள் செயல்படுகின்றன. இங்கு, பழுதான கார்களை சாலையில், பல நாட்களுக்கு நிறுத்தி வைக்கின்றனர். இதனால், வாகனஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுவதுடன், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது.- ஜெலினா, வடவள்ளி. சாலையில் ஓடும் சாக்கடை
சுந்தராபுரம், மதுக்கரை ரோடு, அருள் கார்டன் அருகில், எம்.ஜி.ஆர்., நகர் விரிவாக்கத்தில், பாதாள சாக்கடை மூடிக்கு மேல் கழிவுநீர் வெளியேறி, சாலையில் ஓடுகிறது. இதனால் குடியிருப்பு பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுகிறது.- கார்மேகம், சுந்தராபுரம். ஆபத்தான குழி
கே.கே.புதுார், கலெக்டர் சிவக்குமார் வீதியில், குழாய் சீரமைப்பு பணிக்காக தோண்டப்பட்ட குழி மூடப்படாமல் உள்ளது. கடந்த ஒரு மாதமாக திறந்துள்ள குழி, குழந்தைகள், வாகனஓட்டிகளுக்கு ஆபத்தாக உள்ளது. விபத்து நடக்கும் முன், குழியை விரைந்து மூட வேண்டும்.- ராமகிருஷ்ணன், கே.கே.புதுார். நாய்களால் அச்சுறுத்தல்
பொன்னையராஜபுரம், 73வது வார்டு, இரண்டாவது வீதியில், பத்துக்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றுகின்றன. வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. சாலையில் நடந்து செல்வோர், பைக்கில் செல்வோரை துரத்தி அச்சுறுத்துகின்றன.- ரவிக்குமார், பொன்னையராஜபுரம். பாலம் சேதம்
தொண்டாமுத்துார் ஒன்றியம், தென்னமநல்லுார், காந்தி காலனி பகுதியில் சாக்கடையின் குறுக்கே உள்ள பாலம் சேதமடைந்துள்ளது. பைக்கில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். விரைந்து பாலத்தை சீரமைக்க வேண்டும்.- சரவணன், காந்தி காலனி. சாக்கடை அடைப்பு
பி.என்.பாளையம், ஜி.கே.எஸ்., நகரில், சாக்கடை கால்வாய் பல மாதங்களாக சுத்தம் செய்யவில்லை. இதனால், கால்வாய் முழுவதும் புதர் மண்டி, குப்பை அடைத்து நிற்கிறது. கழிவுநீர் செல்ல வழியே இல்லாமல், அடைப்பு ஏற்பட்டுள்ளது. கழிவுநீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியும்அதிகளவில் உள்ளது.- சத்தியநாராயணன், பி.என்.பாளையம். தொடரும் விபத்து
நஞ்சுண்டாபுரம், நேதாஜி நகரில் ரோடு சாலையின் ஒரு பகுதி மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. பல இடங்களில் தார் பெயர்ந்து, வெறும் ஜல்லிக்கற்களாக காணப்படுகிறது. பள்ளங்களால் அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது.- வேணுகோபால், நேதாஜி நகர்.