உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வரப்பு பயிராக அகத்தி வருவாயும் கிடைக்கிறது

வரப்பு பயிராக அகத்தி வருவாயும் கிடைக்கிறது

உடுமலை : பல்வேறு சத்துகளை உள்ளடக்கிய அகத்தியை, வரப்பு ஓரங்களில் நடவு செய்து பராமரிக்க, உடுமலை விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளிலும், ஏழு குள பாசன திட்டம் உள்ளிட்ட பகுதிகளில், வாழை சாகுபடி பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலை வாழை, பூவன் உள்ளிட்ட பல ரக வாழை சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.இச்சாகுபடியில், வரப்பு பயிராக அகத்தி மரங்கள் நட்டு பராமரிக்கின்றனர். இதனால், காற்று காலத்தில், வாழைக்கு தடுப்பாக, அகத்தி இருக்கிறது. மேலும், குறைவான பரப்பில், தனிப்பயிராகவும் அகத்தி மரங்கள் வளர்க்கப்படுகிறது.இம்மரங்களில் இருந்து பெறப்படும், பூக்கள், பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக கருதப்படுகிறது.எனவே, உடுமலை உள்ளிட்ட அனைத்து சந்தைகளிலும் அகத்தி பூவுக்கு, கிராக்கி உள்ளது. வழக்கமாக, இவ்வகை பூ, கிலோ 80 ரூபாய் முதல் விற்பனையாகிறது.விவசாயிகள் கூறுகையில், 'மழை மற்றும் பனிக்காலத்தில், அகத்தி பூ உற்பத்தி குறைந்து விடும். வாழை சாகுபடியில் வரப்பில் சாகுபடி செய்யப்படும் அகத்தியால், கூடுதல் வருவாய் கிடைத்து வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ