உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாம்பல் விற்பனை வருவாய் ரூ.200 கோடியை தாண்டியது

சாம்பல் விற்பனை வருவாய் ரூ.200 கோடியை தாண்டியது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக மின்வாரியத்திற்கு, சேலம் மாவட்டம் மேட்டூரில், 1,440 மெகாவாட்; துாத்துக்குடியில், 1,050; திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டில், 1,830 மெகாவாட் திறனில், அனல்மின் நிலையங்கள் உள்ளன. அவற்றில், மின் உற்பத்திக்கு எரிபொருளாக தினமும் சராசரியாக, 60,000 டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. அதிலிருந்து, பல நுாறு டன், உலர் சாம்பல் வெளியேறுகிறது. மொத்த சாம்பலில், 20 சதவீதம் செங்கல் தயாரிப்பு உள்ளிட்ட சிறு தொழில்களுக்கு இலவசமாக தரப்படுகிறது. மீதி, அதிக விலை கோரும் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இதில், குறைந்த விலைக்கு, எடை குறைவாக வழங்குவது உள்ளிட்ட முறைகேடுகள் நடந்தன. இதனால், வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதைத் தடுக்க, கடந்த இரு ஆண்டுகளாக சிமென்ட், கல்நார் ஷீட் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, நீண்டகால ஒப்பந்தங்கள் வாயிலாக, சாம்பல் விற்கப்படுகிறது. மேலும், சாம்பல் பிரிவில் ஒருவர், மூன்று ஆண்டுகளுக்கு மேல்பணிபுரிய தடை விதிக்கப் பட்டது. இதுபோன்ற காரணங்களால், சாம்பல் விற்பனை வருவாய் முதல் முறையாக, 2022 - 23ல், 218 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

ஆண்டு வாரியாக வருவாய் - ரூபாய் கோடியில்

2019/20 - 92.812020/21 - 92.902021/22 - 1222022/23 - 1902023/24 - 218


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Apposthalan samlin
ஜூலை 04, 2024 12:27

இந்த சாம்பல் பெயர் fly ash இந்த சாம்பல் 25% சிமெண்ட் இல் எல்லா கம்பெனியும் கலக்கிறது ஒரு டன் சிமெண்ட் 10000 என்று வைத்து கொள்ளுவோம் ஒரு டன் 20 மூடை ஒரு மூடை 500 25% 5 மூடை 2500 ருபாய் பிளை ash இல் மட்டும் லாபம் ஒரு டன் பிளை அச் 1000 டு 1500 கு விக்கலாம் என்ன ரேட் இல் விக்கிறார்கள் என்று தெரியவில்லை . நான் சிமெண்ட் கம்பனியில் வெள்ளை பார்ப்பதால் சொல்லுகிறேன்.


Ganapathy Subramanian
ஜூலை 04, 2024 11:37

இவர்கள் குறைந்த வருவாய் என்று சொல்லி இருக்கும் முதல் இரண்டு வருடங்கள் கொரோனா காலமாகும். அப்போது எல்லா தொழில்களும் பாதிக்கப்பட்டன. சென்ற வருடம் 190 கோடி வருமானம் ஈட்டியுள்ளது.


S. Narayanan
ஜூலை 04, 2024 09:29

அரசு கஜானாவுக்கு வந்ததா


raja
ஜூலை 04, 2024 08:55

நம்ப மின்சார அணில் மட்டும் வெளியே இருந்திருந்தால் அம்புட்டு சாம்பலையும் சாப்டுறுக்கும்....எங்கடா சாம்பல் என்று கேட்டு இருந்தீங்க அம்புட்டு சாம்பலையும் காத்து அடிச்சிட்டு போயிடிச்சுண்ணு அணில் அண்ணன் பதில் சொல்லி இருப்பாரு ...


karthik
ஜூலை 04, 2024 08:18

இவ்வளவு வாய்ப்புகளை வைத்துக்கொண்டு சாராயம் விற்று அரசாங்கத்தை நடத்துகிறது கழக கட்சிகள்


raja
ஜூலை 04, 2024 06:24

அய்யோ அய்யோ அண்ணே காரணம் அது இல்லைகண்ணா.... நம்ப மின்சார அணில் புழல் சிறையில் இருப்பதால் தான்....


Kasimani Baskaran
ஜூலை 04, 2024 05:05

சாம்பலிலும் கூட காசு பார்க்கும் மாடலின் சிறப்பை சொல்லி மாளாது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை