உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வேளாண் மையத்தில் இணை இயக்குனர் ஆய்வு

வேளாண் மையத்தில் இணை இயக்குனர் ஆய்வு

கிணத்துக்கடவு : மாநில வேளாண் திட்டங்கள், மத்திய திட்டங்கள் மற்றும் கோடை சாகுபடி சிறப்பு திட்டங்கள் குறித்து, கிணத்துக்கடவு வேளாண் விரிவாக்க மையத்தில், கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பெருமாள்சாமி ஆய்வு செய்தார்.இதில், இருப்பில் உள்ள விதைகளின் முளைப்பு தன்மை ஆய்வு செய்யப்பட்டது. மேலும், இருப்பில் உள்ள சோளம், தட்டைபயறு மற்றும் உளுந்து விதைகளை, தென்மேற்கு பருவமழை துவங்கும் முன் விவசாயிகளுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.இந்த ஆய்வில், கிணத்துக்கடவு வேளாண் துணை அலுவலர் மோகனசுந்தரம் மற்றும் கிடங்கு மேலாளர் சிவபாலச்சந்தர் ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ